தற்போதைய நிலையில் அரசு ஊழியர்களுக்கு வரி விலக்கு உச்ச வரம்பு 2.5 லட்சமாக உள்ளது.
நேற்று நடைபெற்ற 32 வது ஜிஎஸ்டி செயற்குழு கூட்டத்தில் சிறு தொழில்களுக்கான வரி விலக்கு உச்ச வரம்பு 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில்களுக்கு 40 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கும் அரசு தனி நபரின் ஊதியத்துக்கு மட்டும் 2.5 லட்சத்தை வரி விலக்கு உச்ச வரம்பாக நிர்ணயிப்பது வருத்தமளிப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவது மட்டுமில்லாமல் அவர்களின் வங்கி கணக்கில் சேமிக்கப்படும் சேமிப்புக்கும் வரி வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறாக வரி உச்ச வரம்பும் குறைவாக நிர்ணயம் செய்வதுடன் அவர்களின் சேமிப்புக்கும் வரி வசூலிப்பதால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அரசு ஊழியர்களிடம் சிக்கன வரி முறையை கடைபிடிக்கும் அரசு தொழில் நடத்துபவர்களிடம் தாராள முறையை கடைபிடிப்பதாக வருந்துகின்றனர் அரசு ஊழியர்கள்.
No comments:
Post a Comment