8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி சட்டத்தை ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்.
இது ஏற்கனவே மக்களவையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது.
இம்மசோதாவிற்கு நாடாளுமன்ற நிலைக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டாய தேர்ச்சியை ரத்து செய்யக் கோரி 25 மாநிலங்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் தான் இம் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விட்டதால் விரைவில் சட்டமாகப் போகிறது.
இனி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த 2 மாதத்தில் மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும்.
தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அடுத்து வகுப்புக்கு செல்லலாம்.
No comments:
Post a Comment