டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பலர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்த துவங்கி விட்டனர். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு தங்கள் தகவல் திருடு போய்விடுமோ என்ற பயம் உள்ளது. அதற்கேற்ப ஆன்லைன் மூலம் கார்டு தகவல்களை திருடி பணம் பறிக்கும் கும்பல் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.சில ஆன்லைன் இணைய தளங்களில் உங்கள் கார்டு விவரங்களை சேமித்து வைக்க கோருகின்றனர். பயம் காரணமாக, பிரபலம் இல்லாத ்இணையதளங்களில் தங்கள் கார்டுகளை சேமித்து வைக்கவும், பரிவர்த்தனை செய்யவும் பயப்படுகின்றனர். இந்த அச்சம் நியாயமானதுதான்.
இதை போக்க புதிய தொழில்நுட்பத்தை ரிசர்வ் வங்கி செயல்படுத்த உள்ளது. அதாவது, வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ள டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டில் உள்ள எண்ணுக்கு பதிலாக புதிய எண் வழங்கப்படும். இதை பயன்படுத்தி எந்த இணையதளத்திலும் தாராளமாக பயன்படுத்தலாம். வெளிநாடு செல்லும்போதும் இந்த ’டூப்ளிகேட்’ டோக்கன் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்யலாம். ஆனால், ஒவ்வொரு பரிவர்த்தனை முடிந்ததும் அந்த எண் மாறிவிடும். இதனால் உண்மையான கார்டு எண், வங்கி விவரங்கள் திருடு போகாது. தாய்லாந்து போன்ற நாடுகளில் ஸ்கிம்மர்கள் மூலம் தகவல்களை திருடுவது அதிகம் நடக்கிறது. இந்தியாவிலும் கூட இத்தகைய தகவல் திருட்டுகள் நடக்கின்றன. டோக்கன் கார்டுகளை இ-வாலட், ஆன்லைன் இணையதளங்கள், பரிவர்த்தனை கருவிகளில் பயன்படுத்த புதிய விதிகள் மூலம் ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் இத்தகைய வசதிகளை அளிக்கின்றன. ரிசர்வ் வங்கி இதை பிரபலப்படுத்த முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment