Kalangarai Vilakkam: தமிழக சுற்றுலாத்துறை ஓட்டலில் அறை புக்கிங் செய்வது எப்படி?
ANY SUGGESTIONS, QUERIES, FEEDBACK: Mail to gopinathan36@gmail.com : Whats-app to 9944069494.

தமிழக சுற்றுலாத்துறை ஓட்டலில் அறை புக்கிங் செய்வது எப்படி?





தமிழக அரசின் தமிழ்நாடு ஓட்டலில் அறை புக்கிங் செய்வது எப்படி?

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

http://www.ttdconline.com/login.jsp

2. தற்போது தோன்றும் பக்கத்தில் Sign Up என்ற பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது தோன்றும் பக்கத்தில் பெயர், பாலினம், தேசியம், இமெயில் முகவரி, நாடு, மாநிலம், மாவட்டம், நகரம், முகவரி, பின்கோடு, மொபைல் எண், யூசர் ஐடி, பாஸ்வேர்ட் போன்ற விவரங்களை உள்ளிட்டு Save பட்டனை அழுத்துங்கள்.

4. தற்போது Log in செய்து உள்ளே செல்லுங்கள்.

5. தற்போது தோன்றும் பக்கத்தில் Hotel Booking என்ற தொகுதியைத் தேர்ந்தெடுங்கள்.

6. தற்போது தமிழக சுற்றுலாத்துறையின் கீழ் உள்ள அனைத்து ஹோட்டல்களும் பட்டியலிடப்படும்.

7. உங்களுக்குத் தேவையான ஓட்டல் ஊரைத் தேர்ந்தெடுங்கள்.

8. ஒரு நாள் முன்னதாக மட்டுமே புக்கிங் செய்ய முடியும். நாளை வேண்டுமென்றால் இன்று தான் புக்கிங் செய்ய முடியும்.

9. தற்போது தோன்றும் பக்கத்தில் Reservation From என்ற இடத்தில் நாளைய தேதியையும் Reservation To என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய நாள் வரையும் தேதியை உள்ளிடுங்கள்.

10. தற்போது Check availability பட்டனை அழுத்துங்கள்.

11. காலியாக உள்ள அறைகளின் பட்டியல் காண்பிக்கப்படும்.

12. உங்களுக்குத் தேவையான அறைக்கு எதிராக உள்ள Book Now பட்டனை அழுத்துங்கள்.

13. தற்போது தோன்றும் பக்கத்தில் தேவையான அறைகளின் எண்ணிக்கையை உள்ளிட்டு தங்குபவர்களின் பெயர், பாலினம், வயது ஆகிய விவரங்களை உள்ளிட்டு Book Now பட்டனை அழுத்துங்கள்.

14. தற்போது தோன்றும் பக்கத்தில் Proceed பட்டனை அழுத்தி உரிய தொகையை செலுத்தி ரசீதைப் பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment