ஆமாங்க. GPF/TPF சந்தாதார்களுக்கு SMS ல் விவரங்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை மாநில கணக்கு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்தவுடன் சந்தா விபரங்கள், இருப்புத் தொகை விபரங்கள், கடன் விபரங்கள், விடுபட்ட சந்தா விபரங்கள், இறுதித் தொகை விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்யும் இணைப்பு போன்ற விபரங்கள் உங்களின் மொபைலுக்கு SMS ஆக அனுப்பி வைக்கப்படும்.
தற்போது நமது மொபைல் எண்ணை எவ்வாறு மாநில கணக்கு அலுவலக இணையதளத்தில் இணைப்பது என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://www.agae.tn.nic.in/onlinegpf/loginnew.aspx
2. தற்போது தோன்றும் பக்கத்தில் உங்களது GPF எண்ணை உள்ளிடுங்கள்.
3. அதன் அருகில் SELECT SUFFIX என்ற பகுதியில் உங்களின் SUFFIX ஐ தேர்ந்தெடுங்கள்.
4. DATE OF BIRTH பகுதியில் உங்களின் பிறந்த தேதியை உள்ளிடுங்கள். இந்த வடிவில் உள்ளிடுங்கள் 30/12/1969.
5. அடுத்ததாக உள்ள எளிய கேள்விக்கு உரிய விடையை உள்ளிடுங்கள்.
6. தற்போது லாக் இன் பட்டனை அழுத்துங்கள்.
7. தற்போது உங்கள் மொபைல் எண்ணை அப்டேட் செய்யுங்கள் என்று கூறும்.
8. உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு அப்டேட் பட்டனை அழுத்துங்கள்.
9. தற்போது உங்கள் GPF விவரங்கள் அனைத்தும் திரையில் தெரியும்.
No comments:
Post a Comment