சென்னை பெருநகர காவல்துறையின் மத்திக் குற்றப்பிரிவின் கீழ் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சைபர் குற்றப் பிரிவு, வங்கி மோசடி பிரிவு உள்ளிட்ட 39 பிரிவுகள் செயல்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவும் ஒரு உதவி ஆணையர் தலைமையில் செயல்படுகிறது.
உதவி ஆணையர்களுக்கு மேல் இரு துணை ஆணையர் மற்றும் ஒரு இணை ஆணையர் உள்ளனர்.
மத்தியக் குற்றப் பிரிவில் 134 பெண் காவலர்கள் பணி புரிகின்றனர்.
இந்நிலையில் மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையராக பொறுப்பேற்ற வி.பாலகிருஷ்ணன் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார் பெண் காவலர்கள் அவர்களது குடும்ப சூல்நிலைகளைக் கருத்தில் கொண்டு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் பணி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவு பெண் காவலர்களுக்கும் பணி நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என விரும்பப்படுகிறது.
No comments:
Post a Comment