தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 ம் பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அனைத்து அட்டை தாரர்களுக்கும் பரிசுத் தொகை வழங்க தடை கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பரிசுத் தொகை வழங்க தடை விதித்தது வழங்குவதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
அதாவது சர்க்கரை அட்டை மற்றும் எந்தப் பொருளும் வேண்டாம் அட்டைகளுக்கு மட்டும் பரிசுத் தொகை வழங்க தடை விதித்தது. மற்ற அட்டைகளுக்கு வழங்க தடை இல்லை என அறிவித்தது.
ஆகவே, அரசி அட்டை, அந்தியோதனா அரசி அட்டை, முகாம் அட்டை ஆகிய அட்டை தாரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
இது குறித்து தெளிவுரை சுற்றறிக்கையை குடிமைப்பொருள் வழங்கல் துறை நியாய விலை கடைகளுக்கு இன்று வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகை வழங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment