கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வறுமை நிலையில் உள்ள 77,000 கிராமப் புற பெண்களுக்கு தலா ஒரு பயனாளிக்கு 50 நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தை 5 நபருக்கு கொடுத்து தொடங்கி வைத்தார் முதல்வர்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் 4 அல்லது 5 கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்படும் வகையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதனால் அவர்களுக்கு தீவணம் கொடுப்பதற்கும் கோழிகளை சந்தைப்படுத்துவதற்கும் எளிமையாக இருக்கும் என்று அரசு கருதுகிறது.
ஒவ்வொருவருக்கும் 25 ஆண் கோழிகளும் 25 பெண் கோழிகளும் வழங்கப்படும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr100119_027.pdf
No comments:
Post a Comment