நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் கூடுதலாக 5,000 இடங்கள் அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் நவோதயா பள்ளிகளில் இருந்த இடங்களின் எண்ணிக்கை 46,000 லிருந்து 51,000 ஆக அதிகரித்துள்ளது.
இக்கூடுதல் இடங்களுக்கான சேர்க்கை வரும் 2019 -20 ஆம் கல்வி ஆண்டிலிருந்தே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் உறைவிடக் கல்வி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் நவோதயா பள்ளிகளில் 9 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment