ரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது.
எப்படி இந்த சேவையைப் பெறுவது?
* முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள்.
* வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள்.
* வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்புங்கள்.
* அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் ரயில் எண், அதன் பெயர், எந்தத் தேதியில் ரயில் கிளம்பியது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டியுள்ளது, அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கி இருக்கும்.
No comments:
Post a Comment