ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்க சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சாலை விதிகளை மீறியவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தால் அவர் வேறொரு ஓட்டுநர் உரிமத்தை பெற்று விடுகிறார்.
இதனை தடுக்கும் பொருட்டு ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகிறது. ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைத்து விட்டால் ஒருவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தால் அவர் மற்றொரு ஓட்டுநர் உரிமத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment