1) தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.50 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
2) வருங்கால வைப்பு நிதி மற்றும் சில குறிப்பிட்ட பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் 6.5 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை.
3) நிரந்தர கழிவுத் தொகை ரூ. 40 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
4) 2.4 லட்சம் ரூபாய் வரையில் வீட்டு வாடகைக்கு வருமான வரி கிடையாது
5) வங்கி மற்றும் தபால் நிலையங்களில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு தற்போது வழங்கப்படும் வருமான வரி விலக்கு ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்படும்.
6) வருமான வரி செலுத்துவோருக்கு 24 மணிநேரத்தில் கணக்கு ஆய்வு செய்யப்பட்டு தொகை திருப்பிச் செலுத்தப்படும்
7) 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த தொகை 3 தவணையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
8) அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்திர ஓய்வுதியம் ரூ. 3,000 வழங்கப்படும்
9) கிராஜூட்டி தொகை உச்சவரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும்.
10) ராணுவத்துக்கான ஒதுக்கீடு ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
11) வீடு வாங்குபவர்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்.
12) வீட்டு வாடகை வரி விலக்கு உச்சவரம்பு 1.8 லட்சத்திலிருந்து 2.4 லட்சமாக உயர்த்தப்படும்.
13) புதியதாக மத்திய மீன்வளத்துறை உருவாக்கப்படும்.
14) இயற்கை பேரிடரால் பாதித்த விவசாயிகளுக்கு 2 சதவீத வட்டி தள்ளுபடி.
15) முறையாக வட்டி செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக 3 சதவீத வட்டி தள்ளுபடி.
16) கால்நடை, மீன்வளர்ப்போருக்கு 2 சதவீத வட்டி மான்யம்.
17) அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
18) ESI திட்டத்தில் சேர ஆண்டு வருமானம் 21,000 ஆக உயர்வு
19) திரைப்படத் திருட்டைத் தடுக்க புதிய சட்டம்
20) படிப்பிடிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி.
No comments:
Post a Comment